சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. நான் தவறு செய்திருந்தால் கூட என் வீட்டில் ரெய்டு நடக்கும்- மோடி
போபால்: சட்டத்தின் முன் அனைவரும் சமம், நான் தவறு செய்திருந்தால் கூட என் வீட்டில் ரெய்டு நடந்திருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்டங்கள் நடைபெற்றுவிட்டது.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி பகுதியில் பாஜக பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில் மோடி பேசுகையில் மாநில முதல்வர் கமல்நாத் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதற்கும் காங்கிரஸ் கட்சியினர் என் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

சோதனை
அவர்கள் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டதால் அங்கு சோதனைகள் நடந்தன. என் மீது தவறு இருந்தாலும் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள்.

பழிவாங்கும்
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள ஒரு கட்சி அலுவலகத்தில் மத்திய நேரடி வரிவிதிப்பு இயக்குநரகம் சமீபத்தில் ரூ. 20 கோடி பணத்தை கண்டுபிடித்தது. ஆனால் அதை எல்லாம் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அக்கட்சியினர் புலம்புகின்றனர்.

கட்சியிடம்
கர்ப்பிணிகளுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்காக நாங்கள் அனுப்பும் பணத்தை எல்லாம் இங்குள்ள மாநில அரசு சுரண்டி டெல்லி துக்ளக் சாலையில் உள்ள கட்சியிடம் கொடுத்து விட்டது.

என் மீது தவறு
இப்படி திருட்டுத்தனம் செய்பவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிராக குரலை உயர்த்தி பேசுவது சிரிப்பாக உள்ளது. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். சட்டத்தின் மீது அனைவரும் சமம். என் மீது தவறு இருப்பதாக தெரிந்தால் கூட என் வீட்டிலும் சோதனை நடத்துவார்கள் என்றார் மோடி. துக்ளக் சாலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications