மோடி உத்தரவு.. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அமைக்கப்பட்டது உயர்மட்ட அமைச்சர்கள் குழு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயத்தங்களை மேற்பார்வை செய்வதற்கும், கண்காணிப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு உயர் மட்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு நேற்று, முதல் முறையாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் 3 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே மற்றும் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மனுஷ்க் லால் மண்டாவியா ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.
பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ராவும் தனியாக, கொரோனா வைரஸ் தொடர்பான நிலைமை மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வுஹானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 600 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
கேரளாவில் உள்ள மூன்று இந்தியர்கள் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில்தான், கேரளாவில் பதிவான மூன்று பாதிப்புகள் குறித்தும், உயர்மட்ட அமைச்சரவை குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் அப்போது ஆலோசிக்கப்பட்டன.
உலக சுகாதார நிறுவனம் (WHO) ஏற்கனவே கொரோனா வைரஸை உலக சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் சீனாவில் இதுவரை 350 க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்றுள்ளது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications