உலகிலேயே உயரமான படேல் சிலைக்கு பிரதமர் மரியாதை.. இந்தியாவின் இரும்பு மனிதர் படேலின் பிறந்தநாள் இன்று
காந்திநகர்: இன்று அக்டோபர் 31ம் தேதி, இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொள்கிறார்.
2 நாள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று குஜராத் சென்றார்.. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான, இன்று தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது... இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார்.

நலத்திட்ட பணிகள்: நேற்றைய தினம், அகமதாபாத்திலிருந்து 200 கி.மீ., தொலைவில் உள்ள ஏக்தா நகரில் ஸ்மார்ட் பஸ் ஸ்டாப்கள், ரூ.23.26 கோடியிலான சோலார் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.22 கோடி செலவில், 50 படுக்கைககளுடன் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த பயணத்தின் போது, ரூ.75 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். அதேபோல, தீயணைப்பு துறையினருக்கான குடியிருப்புகள், போன்சாய் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
கருப்பொருள்: அதேபோல, தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஆரம்ப் 6.0-இன் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.. இந்த ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள் "தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரத்துக்கான திட்டம்" என்பதாகும். 99-வது பொது அடிப்படைப் படிப்பான ஆரம்ப் 6.0-ல் இந்தியாவின் 16 குடிமைப் பணிகள் மற்றும் பூடானின் 3 குடிமைப்பணிகளில் இருந்து 653 பயிற்சி அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குஜராத் ஏக்நா நகரில், மாலை 5.30 மணிக்கு ரூ280 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. இந்தத் திட்டங்கள் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துதல், அணுகலை மேம்படுத்துதல் மற்றும் இப்பகுதியில் நிலைத்தன்மை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.
படேல் சிலை: இந்நிலையில், இன்று அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி , சர்தார் வல்லபாய் பட்டேல் 150வதுபிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்கவைத்து, ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்கிறார். இதில் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேச காவல்துறை, 4 மத்திய ஆயுத காவல்படைகள், தேசிய மாணவர் படை மற்றும் அணிவகுப்பு இசைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த 16 அணிவகுப்புக் குழுக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications