நிலநடுக்கத்தால் பீதி அடையவேண்டாம்: ட்விட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்
டெல்லி: நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆறுதல் தகவலை ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியில், இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவானது.
|
ட்விட்டரில் மோடி
நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசியில் பேச்சு
இதனிடையே நிலநடுக்கம் உணரப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியதாகவும் ட்விட்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி உயர்மட்ட கூட்டம்
இதனிடையே நிலநடுக்கம் தொடர்பாக இன்று மதியம் மூன்று மணியளவில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து வடமாநிலங்களில் ஏற்பட்ட விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாள ஜனாதிபதியுடன் பேச்சு
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள ஜனாதிபதி ராம்பிரதான் யாதவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடு சென்றுள்ள நேபாள பிரதமரை தொடர்புகொள்ள பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications