டெல்லி டிராபிக்கில் சிக்கிய மோடி... 3 மணி நேரம் தாமதமாக வீடு போய் சேர்ந்தார்!
டெல்லி: பத்து நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நேற்று டெல்லி திரும்பிய மோடி, இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து தனது இல்லத்திற்கு செல்ல, போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் மூன்று மணி நேர தாமதம் ஏற்பட்டதாம்.
மூன்று நாடுகளில் பத்து நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்த பிரதமர் மோடி நேற்று காலை டெல்லி திரும்பினார். இந்திராகாந்தி விமான நிலையத்திலிருந்து அவரது இல்லத்திற்கு செல்ல வழக்கமாக ஐந்து நிமிடங்கள் தான் ஆகும்.

ஆனால், நேற்று பிரதமரின் இல்லத்திற்கு செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசாரின் கடுமையான முயற்சிக்குப் பிறகே போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டுள்ளது.
இதனால், 5 நிமிடத்தில் வீடு சென்று சேர வேண்டிய மோடி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றுள்ளார்.
இது தொடர்பாக, அப்பகுதி போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘பிரதமர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, போக்குவரத்தும் சரி செய்யப்பட்டிருந்தது. ஆனால் காலை நேரம் என்பதால் வழக்கமான போக்குவரத்து நெரிசல் நேற்று எதிர்பாராத வகையில் அதிக அளவில் இருந்தது' எனத் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications