சுனந்தா சசிதரூர் மரணம்: பிரதமர் இரங்கல்; ஒமர் அப்துல்லா, ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர், சசி தரூரின் மனைவி சுனந்தா டில்லியில், அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த மரணம் பலவித சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ள நிலையில் பிரபலங்கள் அதிர்ச்சி கலந்த இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்

மன்மோகன்சிங்

மன்மோகன்சிங்

சுனந்தாவின் மரணம் பற்றி தகவல் அறிந்த உடன் பிரதமர் மன்மோகன் சிங், சசிதரூரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.சுனந்தாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளும் சக்தியை கடவுள் உங்களுக்கு வழங்கட்டும் என்று கூறியுள்ளார் பிரதமர்.

ஷில்பா ஷெட்டி:

ஷில்பா ஷெட்டி:

சுனந்தா மரணம் குறித்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கவலையாக உள்ளது. நேர்மையான எண்ணங்கள் காரணமாக அவரை மிகவும் பிடிக்கும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

கரண் ஜோகர்-சோனு நிகாம்:

கரண் ஜோகர்-சோனு நிகாம்:

சுனந்தா மரணம் குறித்து செய்தி அதிர்ச்சியளித்தது என கரண்ஜோகர் கூறியுள்ளார். இதேபோல எனது நண்பர் சுனந்தா எங்களை விட்டு சென்றுவிட்டார் என்ற செய்தியை நம்ப முடியவில்லை. அவரை போன்ற நல்லவர்கள் கிடைப்பது அரிது. எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என சோனு நிகாம் கூறியுள்ளார்.

அனுபம் கெர் அதிர்ச்சி:

அனுபம் கெர் அதிர்ச்சி:

நடிகர் அனுபம் கெர், சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்ததாகவும், தன்னையே அழித்து கொள்ளக்கூடிய நபர் சுனந்தா அல்ல எனவும் கூறினார்.

ஒமர் அப்துல்லா

ஒமர் அப்துல்லா

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, எனது நண்பர் புஷ்கர் மரணம் குறித்த செய்தியை நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+