தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. புதுமண தம்பதியுடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது
திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய போது, ஸ்டாலின் புதுமண தம்பதிகளுடன் போராட்டம் நடத்தினார்.
சென்னை: திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய போது, ஸ்டாலின் திமுகவை சேர்ந்த புதுமண தம்பதிகளுடன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் மிகவும் அமைதியாக நடந்து வந்த போதிலும் போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசின் இந்த கொடூர செயலுக்கு எதிராக திமுக அதன் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து சென்னையில் மறியல் போராட்டம் நடத்தியது.
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள்.
கழுத்தில் மணமாலை,கருத்தில் கொள்கை,நினைவெல்லாம் மக்கள் நலன். அதனால்தான் மணமேடையிலிருந்து நேராக கழகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றனர் புதுமணத் தம்பதியர்.
— M.K.Stalin (@mkstalin) May 25, 2018
தூத்துக்குடி கொடூரத்திற்காக அச்சிறுபாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமைக்கு வாழ்த்துகிறேன்#TNBandh4SterliteKillings pic.twitter.com/efTPMJXFHW
இதில் மதுராந்தகம் பகுதியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக கட்சியை சேர்ந்த புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்து நேரடியாக மணக்கோலத்தில் வந்து போராட்டம் நடத்தினார்கள். ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த போலீஸ் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட போது ஸ்டாலின் மற்றும் தொண்டர்களை கைது செய்தது. புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினை வாகனத்திற்குள் ஏற்றவிடாமல் தடுத்து திமுகவினர் போராட்டம் செய்தனர். இதனால் திமுகவினர் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications