ஒரு பொண்ணும் செட் ஆகல.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.. பகீர் முடிவை எடுத்த போலீஸ் கான்ஸ்டபிள்!
திருமணம் நடக்காததால், வேலையை ராஜினாமா செய்துள்ளார் கான்ஸ்டபிள் ஒருவர்
தெலுங்கானா: "ஒரு பொண்ணும் எனக்கு செட் ஆகலை.. எல்லாத்துக்கும் காரணம் இந்த வேலைதான்" என்று நொந்து கொண்ட 29 வயது கான்ஸ்டபிள் ஒருவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தாந்தி பிரதாப். இவர்தான் மனம் நொந்து போனவர். வயசு 29 ஆகிறது. இவர் என்ஜினயரிங் முடித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு தெலங்கானா போலீசில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார். ஆயிரம் கனவுகளுடன் இந்த வேலையில் சேர்ந்தவர், திடீரென ஒரு கடிதத்தை எழுதி உள்ளார்.

ஈடுபாடு
அதில், 'சார்மினார் ஸ்டேஷனில் சித்தாந்தி பிரதாப் என்னும் நான் சில கோரிக்கைகளை உங்களின் கவனத்திற்கு முன்வைக்கிறேன். கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா காவல்துறையில் கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தேன். காவல்துறையில் நன்றாக செயல்பட வேண்டும், என்ற ஏராளமான ஈடுபாட்டுடன்தான் இந்த வேலைக்கு வந்தேன். இதுவரைக்கும் என் கடமையை சரியாக செய்துள்ளேன்.

சிறப்பு ஊதியம்
இருந்தாலும் சில மாதங்களாகவே என்னுடைய சீனியர் அதிகாரிகள் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதை பார்க்கிறேன். அவர்கள் எல்லாம் பெரும்பாலும் 35 வருஷத்துக்கு மேலாக கான்ஸ்டபிளாகவே வேலை பார்த்து ரிடையர் ஆகி உள்ளனர். அவர்களுக்கு பணியில் உயர்வு எதுவுமே கிடைக்காமல், சிறப்பு ஊதியம் மட்டுமே கொடுத்து வந்தனர். ஆனால் எஸ்ஐ, அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் பணி உயர்வு பெற்று சகல வசதிகள் பெற்று வருகின்றனர்.

விருப்பம் இல்லை
எனக்கு இப்போ 29 வயதாகிறது. என் கல்யாணத்துக்கு பெண் தேடி வருகிறேன். எனக்கு வரனாக பார்த்த ஒரு பெண், நான் கான்ஸ்டபிள் என்பதால் என்னை கல்யாணம் செய்ய சம்மதிக்கவில்லை. இதற்கு அந்த பெண் சொன்ன காரணம், "கான்ஸ்டபிளாக இருந்தால் கடைசி வரை கான்ஸ்டபிளாகவே இருப்பார். அதனால் அவரை கல்யாணம் செய்ய விருப்பம் இல்லை" என்று சொல்லி உள்ளாராம்.

அதிர்ச்சி
இதை கேட்டதும் எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது. அதனால்தான் என் வேலையை ராஜினாமா செய்ய முடிவு எடுதேன். என் ராஜினமா நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும்" என்று எழுதி உள்ளார். கல்யாணத்துக்கு பெண் கிடைக்கவில்லை என்று கூறி போலீஸ் கான்ஸ்டபிள் தனது வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications