நடுராத்திரியில் அழுகிய ஆண் சடலத்தால் அரண்ட ஆந்திரம்! ரூ.1.3 கோடி கேட்ட கும்பல் யார்! சிக்கிய துப்பு!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் மின்சாதன பொருட்கள் இருப்பதாக கூறி ஒரு பெண்ணுக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலில் வந்த ஆண் சடலம் யாருடையது என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த சடலத்துடன் வந்த ஒரு மிரட்டல் கடிதத்தில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகதுளசி. இவர் வீடு கட்டி வருகிறார். அதற்கு ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்பினர் உதவி வருகிறார்கள்.

நாகதுளசியின் விண்ணப்பத்தை ஏற்ற அந்த அமைப்பினர் அவருக்கு வீடுகட்ட தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நாகதுளசி வீட்டுக்குத் தேவையான ஃபேன், லைட் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளதாக அவரிடம் போனில் அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவில் நாகதுளசியின் வீடு தேடி ஒரு பார்சல் வந்தது. இதில் என்ன இருக்கிறது என நாகதுளசி கேட்ட போது அந்த நபர், மின்சாதன பொருட்கள் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றாராம். பார்சலை பிரித்து பார்த்த போது நாக துளசி அதிர்ச்சி அடைந்தார்.
அதில் மின்சாதன பொருட்களுக்கு பதிலாக 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அங்கு ஒரு கடிதமும் இருந்தது. அதில் ரூ 1.3 கோடி கேட்டு மிரட்டப்பட்டிருந்தது. கேட்ட பணத்தை கொடுக்கத் தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் நாகதுளசி புகார் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நாகதுளசி, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய போலீஸார் அந்த ஷத்ரிய சேவா அமைப்பினரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.
அது போல் பார்சல் கொண்டு வந்த நபரையும் அடையாளம் காணும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த சடலம் குறித்த முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் இறந்து 4 முதல் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நாகதுளசியின் கணவர் காணாமல் போய்விட்டார்.
அவர் வாங்கிய 3 லட்சம் கடனை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மிரட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் இறந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பார்சல் எங்கிருந்து வந்தது, அதை கொண்டு வந்து கொடுத்த நபர் யார் என்பதை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகதுளசியின் கணவர் யாரிடம் கடன் வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதை முக்கிய துப்பாக போலீஸார் கருதுகிறார்கள். அழுகிய நிலையில் சடலம் வந்த பார்சலை வீட்டிற்குள் வைத்திருந்ததால் ஏதாவது நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால் அந்த வீட்டை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications