பணம், நகை வேண்டாம்.. பெண்கள் உள்ளாடை போதும்.. விசித்திர திருடனால் விக்கித்துபோன மக்கள்

Subscribe to Oneindia Tamil

குவாலியர்: மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீடு புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உலகில் பல வகையான திருடர்கள் இருக்கின்றனர். அவர்கள் திருட்டில் பிரத்யேகமான ஒரு ஸ்டைல் இருக்கும். உதாரணமாக, பீரோ புல்லிங் மூலம் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் திருடர்கள் எங்கு சென்றாலும் அதே பாணியில்தான் திருடுவார்கள்.

அதேபோல, ஒரு குறிப்பிட்ட பொருட்களை திருடுபவர்கள் அதை மட்டும்தான் திருடுவார்கள். வேறு எதையும் திருட மாட்டார்கள். குறிப்பாக, மோட்டார் சைக்கிளை திருடுபவர் தனது வாழ்நாள் முழுவதும் அதையே தான் திருடி வருவார். இதை வைத்தே, போலீஸார் இந்தக் கொள்ளையன் தான் இங்கு கைவரிசையை காட்டியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வர்.

 விசித்திர திருடன்

விசித்திர திருடன்

இந்நிலையில், இந்த திருடர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு விசித்திரமான திருடன் மத்திய பிரதேசத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறான்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் அமைந்துள்ளது கவுஸ்புரா பகுதி. இந்தப் பகுதியில் கடந்த ஓராண்டாகவே ஒரு விசித்திர சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதாவது, அந்தப் பகுதியில் வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் காயப் போடப்படும் பெண்களின் உள்ளாடைகள் காணாமல் போய் வந்தன.

 எப்படி தெரியவந்தது?

எப்படி தெரியவந்தது?

முதன்முதலில், இந்தச் சம்பவம் சில வீடுகளில் நடந்த போது, உள்ளாடைகள் எங்கேயாவது காற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கும் என நினைத்துக் கொண்டு பெண்கள் விட்டுவிட்டனர். ஆனால் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவே, பெண்கள் ஒருவருக்கொருவர் பேசியதால், இது திருட்டு சம்பவம் என்பது தெரியவந்தது. இதனால் பெண்கள் உஷாராகினர்.

 பணம், நகைக்கு நோ..

பணம், நகைக்கு நோ..

இதையடுத்து, அந்தப் பகுதி பெண்கள் தங்கள் உள்ளாடைகளை வீட்டுக்குள் காயப் போட தொடங்கினர். இருந்தபோதிலும், வீட்டில் இருப்பவர்கள் கண் அசரும் நேரம் பார்தது அந்த மர்ம நபர், உள்ளாடைகளை திருடிச் செல்ல தொடங்கினார்.

அதே சமயத்தில், வீட்டில் நகை, பணம் வெளியே இருந்தாலும் அதை அந்த நபர் எடுப்பதில்லை. உள்ளாடைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் பெண்கள் தயங்கினர். இது அந்த திருடனுக்கு வசதியாக போகவே, தொடர்ந்து தனது கைவரிசையை காட்டி வந்திருக்கிறார்.

 சிசிடிவியில் அம்பலம்

சிசிடிவியில் அம்பலம்

இந்நிலையில், நேற்று முன்தினம் கவுஸ்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவரின் பர்தாவும், உள்ளாடைகளும் காணாமல் போயின. அந்த பர்தாவுக்கு அந்தப் பெண் தங்கச் சங்கிலி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது வீட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் நுழைவதும், பின்னர் சிறிது நேரத்தில் பர்தா உள்ளிட்ட உள்ளாடைகளை எடுத்துக் கொண்டு வெளியேறுவதும் தெரியவந்தது.

இதுகுறித்து அப்பெண் கவுஸ்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வழக்கு செய்து உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்லும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+