முசபார்நகர் கலவரத்தில் ஏகே 47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதா?

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அது பெரும் கலவரமாய் வெடித்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரவிய இந்த கலவரத்தில் 38 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்த கலவரத்தின்போது ஏகே 47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கலவரம் நடந்த கிர்தல் கிராமத்தில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 41 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி அருண் குமார் கூறுகையில்,
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏகே 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 41, 9 மிமீ தோட்டாக்கள் 17, நாட்டுத் துப்பாக்கி தோட்டா 1, 1 துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் கிடைத்தன. ஏகே 47 ரக துப்பாக்கி தோட்டாக்களை நாட்டுத் துப்பாக்கிகளிலும் பயன்படுத்தி இருக்கலாம். ராணுவம் மற்றும் போலீசாருக்கு மட்டுமே கிடைக்கும் இந்த தோட்டாக்கள் அந்த கிராமத்தினருக்கு எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தப்படும் என்றார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications