பீகாரில் வன்முறை... போலீசார் உட்பட 4 பேர் பலி... விசாரணைக்கு நிதிஷ்குமார் உத்தரவு!
பாட்னா: பீகாரில் வன்முறை சம்பவம் ஒன்றில் போலீசார் உட்பட 4 பேர் பலியான சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் என்ற இடத்தில் 65 வயது முதியவர் ராஜேந்திர மகதோவும் அவரது ஒன்றரை வயது பேத்தியும் வீட்டில் இருந்தனர். அப்போது தாறுமாறாக வந்த லாரி ஒன்று ராஜேந்திராவின் வீட்டுக்குள் நுழைந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திர மகதோவும் அவரது ஒன்றரை வயது பேத்தியும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து லாரியை வேகமாக ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசில் அந்த கிராம மக்கள் ஒப்படைத்தனர். லாரி ஓட்டுநரோ பீலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆனால் விசாரணைக்கு வந்த போலீசாரும் லாரி டிரைவரும் ஒரே ஜாதி என்பதால் அவரை தப்பவிட்டுவிட்டனர் என கூறி கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதில் லாரி டிரைவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மீதும் அப்பகுதி மக்கள் கற்களாள் சரமாரியாகத் தாக்கினர்.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் லாஞ்கஞ்சைச் சேர்ந்த் ராகேஷ், விகாஷ் இருவரும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர். உயிருக்குப் போராடிய இருவரும் பாட்னா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். ஆனால் வரும்வழியில் ராகேஷ் உயிர் பிரிந்தது.
இதனால் மேலும் கோபமடைந்த லால்கஞ்ச் மக்கள் அஜித்குமார் என்ற போலீசாரை பிடித்து சரமராரியாக அடித்து உதைத்தனர். இதில் போலீஸ்காரர் அஜித்குமாரும் உயிரிழந்தார். இப்படி அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் நிதிஷ்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ4 லட்சம் நிதி உதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications