பாஜக அலுவலகத்தில் முண்டே உடல்- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!
டெல்லி: சாலை விபத்தில் மரணம் அடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் விமான நிலையம் அருகே காலை 6.20 மணியளவில் நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்த கோபிநாத் முண்டே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சைப் பலனின்றி காலை 7.20 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

முண்டேவின் மரணத்தை அடுத்து அவரது உடல் பரிசோதிக்கப்பட்டது. உள்காயம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பரிசோதனையை அடுத்து அவரது உடல் ராணுவ வாகனம் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முண்டேவின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பாரதிய ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தனர்.

கோபிநாத் முண்டேவின் உடல் நாளை மகாராஷ்டிரா மாநிலம் பராலியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications