ஆசாம் கானின் சர்ச்சைக்குரிய கார்கில் பேச்சு- தேர்தல் ஆணையம் விசாரணை!!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: கார்கில் போர் வெற்றிக்கு முஸ்லிம் வீரர்கள்தான் காரணம் என்ற உ.பி, அமைச்சர் ஆசாம் கான் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநில அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம் கான், காசியாபாத்தில் பிரசாரம் செய்த போது, கார்கில் போர் வெற்றிக்கு முஸ்லிம் வீரர்கள்தான் காரணம் என்றார்.

அவரது இந்த பேச்சு கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி உள்ளது. பாரதிய ஜனதா உ:ள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆசாம் கான் பேச்சை விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் காசியாபாத் மாவட்ட நிர்வாகத்திடம் ஆசாம் கான் பேசியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications