டெல்லி மாநகராட்சிகளை கைப்பற்றப் போவது யார்… விறு விறு வாக்குப்பதிவு
டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறு விறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
டெல்லி: டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டெல்லிவாசிகள் விறு விறு வாக்குப்பதிவுகளை செய்து வருகின்றனர்.
டெல்லியில் 3 மாநகராட்சிகள் உள்ளன. டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என்று 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 3 மாநகராட்சிகளிலும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த பல மாதங்களாக எதிர்பார்த்திருந்தன.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் தேதியை டெல்லி மாநில தேர்தல் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா அறிவித்தார். அதன்படி 3 மாநகராட்சிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று மாலை வாக்குப் பதிவுகள் நிறைவு பெற்ற பின்னர், ஏப்ரல் 25-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. கருத்துக் கணிப்புகள் பாஜகவே மீண்டும் மாநகராட்சிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ள நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எந்தக் கட்சி கைப்பற்றப் போகிறது என்று தெரிய வரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications