ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்.ராதகிருஷ்ணன் உறுதி
டெல்லி: தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உறுதியான நம்பிக்கையை அளித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்நிலையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா? இல்லையா என்ற சந்தேகம் மாடு பிடிவீர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் இயற்றப்படுமா? என்ற கேள்விக்கு, ஜல்லிக்கட்டுப் போட்டி இந்த ஆண்டு நடத்தப்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அதற்காக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் உறுதி அளித்துள்ளார் என்றார். மேலும் நாடாளுமன்ற அவைகள் முடங்கியிருப்பதால் அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூற முடியாது என பொன் ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications