ஆப்கா ஓட்டு 'மோடிஜி'க்கே: வாரனாசியில் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
வாரனாசி: வாரனாசியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்கிறார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரனாசி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வதோதரா தொகுதியில் கடந்த 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் மோடிக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களான ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

வாரனாசியில் வரும் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வாரனாசி புறப்பட்டு சென்றுள்ளது. அந்த குழு வாரனாசியில் தமிழர்கள் வாழும் பகுதியில் வீடு, வீடாகச் சென்று இன்று முதல் வாக்கு சேகரிக்கிறது.
தமிழர்களிடம் கொடுக்க அவர்கள் எடுத்துச் சென்றுள்ள துண்டு பிரசுரங்களில் கூறியிருப்பதாவது,
உலகை காக்கும் விசுவநாதர் பூமி காசி. இனி பாரதத்தை காக்கும் மோடியின் பூமியும் காசி.
வாரனாசி வாக்காள பெருமக்களே... தருமத்தை காத்து வாழும் நீங்கள் பாரதத்தை காத்திட மோடியின் தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
தமிழக மக்கள் சார்பில் தங்களிடமும், காசி விசுவநாதரிடமும் வேண்டும் ஒரே வேண்டுகோள் இது தான்... என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குழு வரும் 10ம் தேதி வரை வாரனாசியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!










Click it and Unblock the Notifications