நெடுவாசல் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்ற பொன். ராதாகிருஷ்ணன்... டுவிட்டரில் கொந்தளிக்கும் மக்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்படுவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதற்கு டுவிட்டரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட உள்ளதாகவும் திட்டம் செயல்படுத்தப்படாது என்று நம்புவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ' ஒப்பந்தம் கையெழுத்து' ஆவதால் திட்டம் நிறைவேறும் என்ற அச்சம் வேண்டாம் என பொது மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
திட்டம் செயல்படுத்தப்படாது
நெடுவாசல் போராட்டக்குழுவினரிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளது போன்று, மக்களின் ஆதரவில்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டது என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
|
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் கையொப்பம் இடப்படுவதாகவும், பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
குழப்பம் வேண்டாம்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
|
டுவிட்டரில் எதிர்ப்பு
இதை சொல்வதற்கு ஒரு அமைச்சர் ஏன் என்று கேட்டுள்ள வலைத்தளவாசிகள் பொன். ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
|
கையெழுத்து ஏன்?
திட்டமே வேண்டாம் என்று கூறும் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏன் என்று டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பொன். ராதாகிருஷ்ணன் என்ன பதில் சொல்லப்போகிறாரோ?
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications