ராகுலைக் காணவில்லை... இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம்!
அலகாபாத்: விடுமுறையில் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எங்கே இருக்கிறார் என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், ராகுலின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப் படும் என அலகாபாத்தில் நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளது பாஜக.
சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளால், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு வார விடுமுறையில் சென்றிருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள அனைத்து இந்திய காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் ராகுலைக் கட்சியின் தலைவராக நியமிக்க அக்கட்சித் தலைவர் சோனியா முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராகுல் ஓய்வில் சென்றிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க ஓய்வில் சென்றுள்ள ராகுல் தற்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. முதலில் பாங்காங் செல்வதாகக் கூறிய ராகுல் பின்னர் உத்தரகாண்ட் சென்று தங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
ஆனால், அவை கடந்த 2008ம் ஆண்டு எடுக்கப் பட்டவை எனக் கூறிய காங்கிரஸ், ராகுலின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மவுனத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொது பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகின்ற வேளையில் காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல் இவ்வாறு ஓய்வில் சென்றிருப்பது அவரது பொறுப்பின்மையைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ளூர் பாஜக தலைவர்கள் சார்பில் போஸ்டர் ஒன்று அடித்து, அங்குள்ள சுவர்களில் ஒட்டப் பட்டுள்ளது. அதில், ராகுலின் பெரிய புகைப்படத்திற்கு கீழே, ‘காங்கிரஸ் தலைவரான இவரைக் காணவில்லை. இவர் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படும்' என எழுதப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு அருகில் உள்ள சுவர்களிலும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications