கர்நாடக முதல்வர் பட்ஜெட் வாசித்தபோது 2 முறை தடைபட்ட மின்சாரம்! அதிர்ச்சியில் அதிகாரிகள்
பெங்களூர்: கர்நாடக பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்கு ரூ.222 கோடியும், பெங்களூர் நகர வளர்ச்சிக்கு ரூ.6046 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று முதல்வரும், நிதித்துறை பொறுப்பை வகிப்பவருமான சித்தராமையா தாக்கல் செய்தார்.

அதில் பெங்களூர் நகர வளர்ச்சி குறித்து கூறியதாவது: நகரில் 51.65 கி.மீ தூரத்திற்கு 4 காரிடார் சாலைகள் சிக்னல் அற்ற சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நகரின் மத்திய பகுதியில் 16.57 கி.மீ தூரத்திற்கு டெண்டர் சுயர் தர மதிப்பீடு படி சாலை மேம்பாடு செய்யப்படுகிறது. இதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஐடி துறை வளர்ச்சிக்கு ரூ.222 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நகரத்தில் மொத்தம் 300 கி.மீ நீள சாலைகள் சிமெண்ட் சாலைகளாக தரம் உயர்த்தப்படும். புராதான மதிப்பு கொண்ட, ரசல் மார்க்கெட், ஜான்சன் மார்க்கெட், கே.ஆர்.மார்க்கெட் மேம்படுத்தப்படும்.
ஒயிட்பீல்டு, பீன்யா தொழில்பேட்டை உள்ளிட்ட ஐடி-பிடி நிறுவனங்கள் குவிந்துள்ள பகுதிகள் மேம்படுத்தப்படும்.
கார் பார்க்கிங் பிரச்சினையை தவிர்க்க நகரின் சில பகுதிகளில் அடுக்குமாடி பார்க்கிங் நிறுத்தங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, சட்டசபையில் இருமுறை மின்சாரம் தடைபட்டது. இருமுறையும் தலா 5 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சாரம் தடைபட்டபோது சித்தராமையா நின்றபடியே விளக்கு வெளிச்சம் வரும் வரை காத்திருந்தார். கர்நாடகாவில் கடுமையான மின்வெட்டு நிலவும் இந்த சூழ்நிலையில், சட்டசபையில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஜெனரேட்டர் போன்ற வசதிகள் இருந்தும் இதுபோல மின்சாரம் தடைபட சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ்












Click it and Unblock the Notifications