நான் கற்பழிச்சேனா, கொலை செய்தேனா?... 'பிங்க் ஜட்டி' முத்தலிக் டென்ஷன்!
டெல்லி: தன்னை பாஜகவில் சேர்த்து விட்டு பின்னர் அதை ரத்து செய்தது குறித்து பிரமோத் முத்தலிக் கோபத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் சேனா தலைவரான பிரமோத் முத்தலிக் ஒரு சர்ச்சைக்குரியவர். பல சர்ச்சைகளிலும் இவர் சம்பந்தப்பட்டவர். இந்த நிலையில் இவர் திடீரென பாஜகவில் சேர்ந்தார். இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்து விட்டன.
மோடியை எப்படியாவது பிரதமராக்கி விட வேண்டும் என்ற துடிப்புடன் உள்ள நேரத்தில் இவரால் பிரச்சினை வேண்டாமே என்று நினைத்துப் பயந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு முத்தலிக்கை பாஜகவில் சேர்த்ததை ரத்து செய்து உத்தரவிட்டு விட்டார்.

இதனால் முத்தலிக் அப்செட்டாகியுள்ளார். தான் என்ன தவறு செய்தேன் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஹூப்ளியில் இருந்தபடி அவர் அளித்த பேட்டியில், இன்னும் ஓரிரு நாட்களில் எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.
நான் தவறு செய்துள்ளேன் என்றால் அதை கோர்ட்தான் பார்த்து தண்டிக்க வேண்டும். தீர்ப்பளிக்க முடியும். ராஜ்நாத் சிங் தீர்ப்பு தர முடியாது. மாநில பாஜக தலைவர்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்கள் நடந்ததற்காக என்னிடம் மன்னி்ப்பு கேட்டுக் கொண்டனர்.
எனது ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர். நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். அவசரப்பட்டு விட்டது பாஜக. ஆனால் நான் பாஜகவுக்கு ஆரவாகவே இருப்பேன்.
இந்த முடிவுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். உள்ளது.என்னைப் போன்றவர்களால்தான் பாஜக கர்நாடகத்தில் வலுவாக உள்ளது. மற்றவர்களை எம்.பிக்களாகவும், எம்.எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்க நாங்கள் போராட்டம் நடத்துகிறோம், சிறைக்குப் போகிறோம், தடியடிகளைப் பரிசாகப் பெறுகிறோம். நான் அப்படி என்ன தவறு செய்து விட்டேன். நான் அவர்களுக்கு உறுத்தலாக தெரிகிறேன் போலும்.
பாஜகவில் ஊழல் செய்யாதவர்களே இல்லையா. அவர்கள் அவர்களுக்கு உறுத்தலாக இல்லையா. நான் ஏழை. பணம் இல்லை. சம்பாதிக்கவும் இல்லை. இந்தியாவின் தார்மீக நெறிகளை பரப்ப முயற்சித்ததற்காக சிறைக்குப் போனவன். எனக்குப் பதில் வேண்டும்.
நான் யாரையாவது கற்பழித்தேனா. கொலை செய்தேனா.. என்ன குற்றம் செய்தேன் என்று கோபமாக கேட்டுள்ளார் முத்தலிக்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications