81வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரணாப் முகர்ஜி.. வாழ்த்திய தலைவர்கள்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது 81வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது 81வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 19935ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தார். இவரது 81வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் 'குடியரசுத் தலைவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகக்கள். அவரது அனுபவம் மற்றும் ஞானத்தால் நமது நாடு மிகப் பெரிய பயன் அடைந்துள்ளது. அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற படித்த புத்திசாலியான ஜனாதிபதியை நாம் பெற்றிருப்பதால் பெருமைக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.'
இதேபோல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், குடியரசுத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்வில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி தான் வகித்த பதவிகள் அனைத்தையும் நேர்மையாகவும் திறமையாகவும் நிர்வகித்து அவற்றுககு பெருமை சேர்த்தவர்.
Birthday wishes to Rashtrapati Ji. His tremendous experience & wisdom has benefitted the nation greatly. I pray for his long & healthy life.
— Narendra Modi (@narendramodi) December 11, 2016
அவரது அறிவாற்றல், அனுபவத்துக்கு எவரும் நிகரில்லை. உலக அரங்கில் இந்தியா மேலும் வல்லமையோடும், பொலிவோடும் முன்னேறிச் செல்ல அவரது அனுபவ நுட்பமும் தலைமைப் பண்பும் மிகப்பெரிய சொத்தாகும்.அவர் நீண்ட ஆயுள், நலனோடு சேவைபுரிய புதுச்சேரி அரசு சார்பிலும், மாநில மக்கள் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications