குடியரசு தலைவரின் சென்னை பயணம் திடீர் ரத்து!
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர் ஒருவரின் வருகையால் குடியரசு தலைவரின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விமானம் மூலம் கோவை செல்லும் அவர் உதகையில் நடைபெறும் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சென்னை வரும் பிரணாப் முகர்ஜி குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் காமாட்சியம்மன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சங்கரா பல்கலைக் கழக விழாவில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் படுவேகமாக நடைபெற்றது.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர் ஒருவர் இந்தியா வருவதால், பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications