நடிகை பிரதியுஷா என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன் என்ற ராகுல் மீது வழக்கு
மும்பை: நடிகை பிரதியுஷா பானர்ஜியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் ராகுல் ராஜ் சிங் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி(24) கடந்த 1ம் தேதி மும்பை கோரிகாவ்ன் பகுதியில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் பிரதியுஷாவின் காதலர் ராகுல் ராஜ் சிங்கிடம் கடந்த சனிக்கிழமை 14 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ராகுல் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.

ராகுல்
ஐசியுவில் வைக்கப்பட்டுள்ள ராகுலின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். பிரதியுஷா என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்ல வேண்டும் என்று அவர் மீண்டும் மீண்டும் கூறுவதாக ராகுலின் தந்தை கூறியுள்ளார்.

வழக்கு
ராகுலுக்கும், பிரதியுஷாவுக்கும் இடையேயான காதல் உறவு சரி இல்லை என்றும் உறவை முறித்துக் கொள்ள அவர் விரும்பியதாகவும் அவருடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராகுல் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடி
ராகுலின் முன்னாள் காதலியான சலோனி சர்மா பிரதியுஷாவை அவ்வப்போது சந்தித்து தாக்கி வந்துள்ளார். இதனால் அவர் பயத்தில் இருந்திருக்கிறார். இது குறித்து பிரதியுஷா ராகுலிடம் கூறியபோது எல்லாம் அவர் தனது போனை சுவிட்ச் ஆப் செய்ததுடன் பிரதியுஷாவை சந்திப்பதை தவிர்த்தார் என நடிகையின் நண்பர் விகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

அறை
ராகுல் பிரதியுஷாவுக்கு துரோகம் செய்து வந்ததாக அவரின் தோழி காம்யா பஞ்சாபி மற்றும் நண்பர் விகாஸ் குப்தா தெரிவித்துள்ளனர். ராகுல் பிரதியுஷாவை பார்ட்டிகள் முதல் பொது இடங்கள் வரை பல இடங்களில் அறைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்
ராகுல் பிரதியுஷாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதை தாங்க முடியாமல் தான் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் நடிகையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications