நடிகை பிரதியுஷா தற்கொலை: பெற்றோர், நண்பர்கள் 'திடுக்' தகவல்
மும்பை: காதலர் ராகுல் ராஜ் சிங்கின் கொடுமையை தாங்க முடியாமல் தான் நடிகை பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். பிரதியுஷா தற்கொலை செய்து கொள்பவர் அல்ல என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி கடந்த 1ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் காதலர் ராகுல் ராஜ் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராகுல்
ராகுலை வெளியே விடக் கூடாது. என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க உதவுமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். ராகுல் என் மகளை கொடுமைப்படுத்தியே முடித்துவிட்டார். அவரது ஆயுள் முழுவுதும் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தண்டனை
ராகுலுக்கு தண்டனை கிடைக்கும் வரை என் மகளின் ஆத்மா சாந்தி அடையாது. பிரதியுஷாவுக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு. சிம்மராசிக்காரரான அவருக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டு என்று நான் அவரிடம் கூறினேன். அவர் கடைசியாக என்னுடன் செல்போனில் பேசுகையில் வீட்டின் அழைப்பு மணி சப்தம் கேட்டதும் போனை வைத்துவிட்டார் என பிரதியுஷாவின் தந்தை ஷங்கர் பானர்ஜி கூறியுள்ளார்.

பிரதியுஷா
பிரதியுஷா தற்கொலை செய்ய சில மணிநேரங்களுக்கு முன்பு பால்கனியில் நின்று யாருடனோ செல்போனில் பேசியபடி கதறி அழுததாக அவர் வசித்த அதே குடியிருப்பில் இருக்கும் டிவி நடிகர் அனுஜ் சச்தேவா தெரிவித்துள்ளார். பிரதியுஷா தனக்கு பழக்கம் இல்லாததால் அவரின் வீட்டிற்கு சென்று அவரை பார்க்கவில்லை என்கிறார் அனுஜ்.

தற்கொலை
பிரதியுஷா நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார். தன்னை படாதபாடு படுத்திய ராகுலை விட்டுப் பிரிய அவர் முடிவு செய்திருந்த நிலையில் இறந்துள்ளார் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications