கர்ப்பமா என சோதனை.. ம.பி போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்
மத்தியப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளை கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மத்தியப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளை கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் வேலையில் சேர்பவர்களுக்கான தகுதி விபரங்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான உயரம் எவ்வளவு என அரசு குறிப்பிடவில்லை.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்ற நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபிள்களாக சேர நடந்த தகுதி தேர்வில் பெண்களுக்கான உயரத்தில் தளர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண்கள் போராட்டம் நடத்தினர்.

விடுவிப்பு
அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

மோசமாக நடத்தப்பட்டோம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிறையில் போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டோம் என குற்றம் சாட்டினார்கள்.

செல்போன் பறிப்பு
தாங்கள் கிரிமினல்கள் போன்று நடத்தப்பட்டோம் என்றும் போபாலுக்கு மூன்று மணி நேரம் வேனில் பயணித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களின் செல்போன்களை பறித்துக்கொண்டு பெற்றோரிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

கர்ப்ப சோதனை
சிறைக்கு இரவு அழைத்து செல்லப்பட்டதாகவும் சிறைக்கு சென்றதும், தனியறையில் வைத்து சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம் என்றும் அது கர்ப்பமாக இருக்கிறோமா? என பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

ஆண்களும் நுழைந்தனர்
மேலும் தாங்கள் அடைத்து வைக்கப்பட்ட அறைக்குள் ஆண்களும் நுழைந்தார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். போலீஸ் தகுதி தேர்வில் பங்கேற்ற மாணவிகளுக்கு கர்ப்பமாக உள்ளனரா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications