விவசாயிகளின் பிரச்சனை தீர... நதிகளை இணைப்பது அவசியம்.. மண் சோறு சாப்பிட்டு பிரேமலதா பேச்சு
29வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை டெல்லியில் தேமுதிக தலைவர் பிரேமலதா சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது நதி நீர் இணைப்பின் அவசியம் குறித்து பேசினார்.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று 29வது நாளாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராடும் விவசாயிகளை தேமுதிக சார்பில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிரேமலதா, மண் சோறு சாப்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆதரவு
டெல்லியில் இவ்வளவு நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். எப்போதும் தேமுதிக விவசாயிகள் பக்கம் நிற்கும். விவசாயம்தான் நமக்கு மிக முக்கியம்.

நதி நீர் இணைப்பு
விவசாயிகளின் பிரச்சனை தீர வேண்டும் என்றால் நெடுஞ்சாலைகளை ஒன்றிணைத்தது போன்று நதிகளை தேசிய அளவில் இணைக்க வேண்டும். அப்போது விவசாயிகளின் நீர் பிரச்சனை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிரச்சனைகளும் தீரும்.

மாநில அரசின் பொறுப்பு
நேற்று நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவு. இதுகுறித்து தமிழக அரசு ஏன் வாய் திறக்காமல் இன்னும் அமைதியாக உள்ளது. இந்த பிரச்சனையில் மாநில அரசுக்கும் பொறுப்புள்ளது.

மத்திய அரசு பேச்சுவார்த்தை
விவசாயிகளின் பிரச்சனை தீர மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உடனடியாக அவர்களது கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications