காங்கிரஸ் கட்சிப்பணிக்காக... மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா திடீர் ராஜினாமா

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்திரி தல்பிர் சிங்கின் மகளான குமாரி செல்ஜா, கடந்த 1990ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மக்களவைக்கு கடந்த 1991ம் ஆண்டு அவர் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சி பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்களாக இருக்கும் சிலர் கட்சி பணிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன், கட்சி பணியாற்றுவதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சராக இருந்த குமாரி செல்ஜாவை(51), கட்சி பணிக்கு அனுப்ப காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. நான்காவது முறையாக மக்களவை எம்.பி.யாக இருக்கும் குமாரி செல்ஜா, அரி யானா மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள் ளார். இதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று முன்தினம் இரவு அளித்தார்.
முக்கிய தலித் பிரமுகராக இருக்கும் குமாரி செல்ஜாவுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய இடம் அளிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமாரி செல்ஜாவின் ராஜினாமாவை குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொண்டதையடுத்து, அவரது சமூக நீதித் துறை, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே வசம் கூடுதலாக ஒப்படைக்கப் பட்டுள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications