தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு இனி 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளித்தார்.
டெல்லி: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு நடைமுறையில் உள்ள 3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதமாக மாற்றும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது 6 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு தற்போது வெறும் 12 வாரங்கள் அதாவது 3 மாதங்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.
இதை மாற்றி 10-க்கும் மேறபட்டோர் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் உள்ள மகளிருக்கும் 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கும் வகையில் மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா மார்ச் 9-ஆம் தேதி லோக்சபாவிலும், மார்ச் 20-இல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.
அதில் 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் 12 வாரங்கள் விடுப்பு வழங்கவும் கோரப்பட்டது.

55 ஆண்டுகள் பழைமை
இதன் பின்னர் 55 ஆண்டுகால பழமையான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு அவர் இன்று ஒப்புதல் அளித்தார்.

26 வாரங்களாக அதிகரிப்பு
அதில் 12 வாரங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 26 வாரங்களாக அதிகரிக்கிறது. அந்த காலகட்டத்தில் முழு ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இந்த திட்டமானது முதல் இரு குழந்தைகளுக்கு மட்டுமே ஆகும். மேலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு வழக்கம் போல் 12 வாரங்கள் மட்டுமே இருக்கும். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் பணிக்கு சேரும்போது அவர்களுக்கு இதுதொடர்பாக அறிவிக்க வேண்டும்.

தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும்...
அதேபோல் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பாக 12 வாரங்கள் அளிக்க வேண்டும். இந்த 26 வார காலத்துக்கு பிறகு வீட்டிலிருந்து பெண்கள் பணியாற்றும் வசதி இருக்கும் நிறுவனங்கள் அதை அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 3-ஆவது இடம்
மகளிருக்கு மிக அதிக வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கும் நாடுகளுள் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. 50 வாரங்களுடன் கனடாவும், 44 வாரங்களுடன் நார்வேயும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications