மறைந்த அப்துல் கலாம் என்றும் நினைவில் நிற்பார்..இரங்கல் செய்தியில் பிரணாப் முகர்ஜி உருக்கம்
டெல்லி : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சியின் சாதனைத் தலைவராக நாட்டின் பாதுகாப்பை விரிவுபடுத்தியவர் அப்துல் கலாம் என்று பிரணாப் தெரிவித்துள்ளார்.
ஒரு அதி சிறந்த விஞ்ஞானியாக, ஆளுமைத் திறன் மிக்கவராக, கல்வியாளராக, ஒரு எழுத்தாளராக அப்துல் கலாம் நமது நினைவில் எப்போதும் நீங்காமல் இருப்பார் என்றும் பிரணாப் கூறியுள்ளார்.
குழந்தைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த கலாம், இளைஞர்களால் விரும்பப்பட்டவர் என்றும், தனது ஊக்கம் மிகுந்த பேச்சால், கருத்தால் இளைஞர்களை கவர்ந்தவர் என்றும் பிரணாப் புகழாரம் சூட்டியுள்ளார்.
தனது எளிமையால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் அப்துல் கலாம் என்றும், தாய் நாட்டின் வளர்ச்சிக்காக தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட மிகப் பெரிய மனிதரை நாம் இழந்து விட்டோம் என்றும் பிரணாப் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் மறைவு தனிப்பட்ட முறையில் தனக்கு மிகப் பெரிய இழப்பு என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications