வங்கதேசத்தில் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
டாக்கா: வங்கதேசத்தின் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்களில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பங்கேற்றார். வங்கதேச தலைநகர் டாக்காவில் விடுதலை பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
1971-ம் ஆண்டு பாகிஸ்தான் பிடியில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தி இந்தியா வெற்றி வாகை சூடியது.

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் 1971-ம் ஆண்டு யுத்த வெற்றி விழா மற்றும் வங்கதேச விடுதலையின் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டாக்கா சென்றுள்ளார்.

மூன்று நாள் பயணமாக வங்கதேசம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அந்நாட்டு முப்படைகள் சார்பாக 21 குண்டுகள் வழங்க சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். பின் வங்கதேசத்தின் தந்தையான முஜ்பூர் ரஹ்மான் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
LIVE: President Ram Nath Kovind attends Victory Day Parade at National Parade Ground in Dhaka https://t.co/sttr3O72fz
— President of India (@rashtrapatibhvn) December 16, 2021
இன்று டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேச விடுதலை பொன்விழா நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். டாக்காவில் வங்கதேச முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று பார்வையிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications