ஓயாத கலவரம்.! மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.. மத்திய அரசு அறிவிப்பு
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட காலமாக இன கலவரம் நடந்து வரும் நிலையில், அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வராக இருந்த பைரன் சிங் மூன்று நாட்களுக்கு முன்பு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே இப்போது அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இப்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்குக் கடந்த இரு ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

அங்கு பைரன் சிங் முதல்வராக இருந்த நிலையில், சமீபத்தில் தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்கிடையே அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பைரன் சிங் அரசு:
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு அங்கு யார் முதல்வர் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், இப்போது மூன்று நாட்களில் அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குக் கடுமையான இன கலவரம் நிலவும் சூழலில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 174(1)வது பிரிவின் கீழ், மாநிலச் சட்டசபைகள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். மணிப்பூரில், கடைசியாக அங்கு 2024 ஆகஸ்ட் 12ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டது. அதன் பிறகு நேற்று பிப்ரவரி 5ம் தேதிக்குள் சட்டசபை கூட்டப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், சட்டசபை கூட்டப்படாத நிலையில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
பின்னணி:
அங்குக் கடந்த திங்கள்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுவதாக இருந்தது. இருப்பினும், அன்றைய தினம் பைரன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வரப்பட இருந்தது. இதனால் அவர் திடீரென ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் இன கலவரம் தொடர்ந்து வருகிறது.
சுமார் 2 ஆண்டுகளாக இன கலவரம் தொடரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அவரது அரசால் முடியவில்லை. இதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். அழுத்தம் அதிகரித்த சூழலில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக பைரன் சிங் அறிவித்தார். அதைத் தொடர்ந்தே இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
President's Rule imposed in Manipur.
— ANI (@ANI) February 13, 2025
Manipur CM N Biren Singh resigned from his post on 9th February. https://t.co/vGEOV0XIrt pic.twitter.com/S9wymA13ki
காங்கிரஸ் விமர்சனம்
அதேநேரம் பைரன் சிங் ராஜினாமா என்பது அங்கு பாஜக அரசைக் காப்பாற்ற அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று அங்குள்ள காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறி இருந்தால் பாஜக அரசு கவிழ்ந்து இருக்கும். அதைக் காப்பாற்றவே பைரன் சிங்கை பாஜக ராஜினாமா செய்ய வைத்ததாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு இன கலவரம் வெடித்தது. இரு தரப்பு மக்களுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், பல மோசமான சம்பவங்கள் அரங்கேறியது. அதன் பிறகு சில மாதங்கள் அமைதி திரும்பியிருந்தது. இதற்கிடையே கடந்தாண்டு நவம்பர் மாதம் அங்கு மீண்டும் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications