For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புடினின் எதிரி.. இந்தியாவில் "மர்மமாக" பலியான ரஷ்யாவின் டாப் எம்பி..கூட வந்தவரும் பலி.. ஹிட் ஜாப்-ஆ?

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: ரஷ்யாவை சேர்ந்த எம்பி பாவெல் அன்டோவும் அவருடைய நண்பரும் வெறும் இரண்டு நாட்கள் இடைவெளியில் இந்தியாவில் மரணம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஹிட் ஜாப்பாக இருக்குமோ என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Putin-ஐ எதிர்த்த கோடீஸ்வரர்!..உடல் கூட Russia-வுக்கு போகல..Hit Job? | Alexei Navalny

    இந்த இரண்டு மரணங்கள் பற்றி பார்க்கும் முன் ஹிட் ஜாப் என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம். கூலிப்படை கொலைகளைத்தான் ஹிட் ஜாப் என்று சொல்வார்கள். சர்வதேச அளவில் இப்படி பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஹிட் ஜாப் மூலம் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

    முக்கியமாக அரசியல் எதிரிகள், உளவு ஏஜென்ட்கள் இப்படி ஹிட் ஜாப்கள் மூலம் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். காசுக்கு கொலை செய்யும் சர்வதேச கும்பல்களிடம் பணம் கொடுத்து இது போன்ற கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக அரங்கேற்றப்படும்.

    உக்ரைன் யுத்தத்தை நிறுத்த விரும்பும் ரஷ்யா.. தைவானை ஆக்கிரமிக்க 39 போர் விமானங்களை பறக்கவிட்ட சீனா உக்ரைன் யுத்தத்தை நிறுத்த விரும்பும் ரஷ்யா.. தைவானை ஆக்கிரமிக்க 39 போர் விமானங்களை பறக்கவிட்ட சீனா

     கொலையா?

    கொலையா?

    அந்த வகையில்தான் தற்போது ரஷ்யாவை சேர்ந்த எம்பியும், அவரின் நண்பரும் இந்தியாவில் பலியாகி இருப்பது ஹிட் ஜாப்பாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோவின் நண்பர் விளாடிமிர் பிடெநோவ் கடந்த 22ம் தேதி தனது அறையில் மர்மமான முறையில் பலியாகி கிடந்தார். இவர்கள் இருவரும் ஒடிசாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேறு வேறு அறையில் தங்கி இருந்தனர். இவரின் உடலுக்கு அருகே சில மது பாட்டில்கள் இருந்தன. உடலில் பெரிதாக காயம் எதுவும் இன்றி அவர் பலியாகி கிடந்தார். இதையடுத்து அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஹோட்டல்

    ஹோட்டல்

    அவர் தங்கி இருந்த அதே ஹோட்டலில்தான் ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோ தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலையில் அவரின் உடல் ஹோட்டலுக்கு வெளியே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. ரத்தம் மிதக்க அவரின் உடல் அங்கே தலை உடைந்து கிடந்தது. 3வது மாடியில் இருந்த ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோ அங்கிருந்து விழுந்து பலியாகி உள்ளார். இவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நண்பரின் மரணம் காரணமாக மன அழுத்தத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

     கொலை

    கொலை

    இன்னொரு பக்கம் இவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாம். இது ஹிட் ஜாப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோ அதிபர் புடினுக்கு எதிராக தீவிரமாக பேசி வந்தார். புடினை பல இடங்களில் இவர் விமர்சனம் செய்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததே தவறு என்று கூறி இருக்கிறார். புடினின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக இவர் விமர்சனம் செய்து இருக்கிறார். இந்த நிலையில்தான் ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோ மரணம் அடைந்த சம்பவம் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

    சந்தேகம்

    சந்தேகம்

    தன்னுடைய 66வது பிறந்த நாளை கொண்டாட ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோ இந்தியா வந்திருந்தார். 4 பேர் இந்தியா வந்த நிலையில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதில் ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோதான் அந்த நாட்டின் மிக பணக்கார எம்பி ஆவார். ரஷ்யாவில் இருக்கும் அலிகார்க்குகளில் இவரும் ஒருவர். அலிகார்க்ஸ் என்பவர்கள் ரஷ்யாவில் இருக்கும் பணக்கார குடும்பங்கள் ஆவர். சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே இந்த பணக்கார குடும்பங்கள் ரஷ்ய அரசின் முடிவுகளில் தலையிட்டு வருகின்றன. இவரின் சம்பந்தம் இன்றி ரஷ்யாவில் அரசு பெரிய முடிவுகளை எடுக்க முடியாது. இந்த போருக்கும் கூட இவர்களின் சம்பந்தம் வேண்டும். இந்த நிலையில்தான் ரஷ்யாவின் அஸ்திவாரமாக கருதப்படும் அலிகார்க்ஸ் சிலருடன் புடின் மோதல் போக்கை கடைபிடிக்க தொடங்கி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் பாவெல் ஆண்டோ பலியாகி உள்ளார். சர்வதேச அளவில் இந்த மரணம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    நாவல்னி

    நாவல்னி

    ஏற்கனவே ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸை ஏ நாவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே மூன்று முறை இவரை கொலை செய்ய சதி திட்டம் போடப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் யாருக்கும் பயப்படாத அதிபர் புடினே இவரை பார்த்து பயப்படுகிறார், புடின்தான் நாவல்னி மீதான இந்த திடீர் தாக்குதலுக்கு காரணம் என்றும் கூட ரஷ்ய ஊடகங்கங்கள் தெரிவிக்கிறது. ரஷ்யாவின் அதிபர் புடின், தன்னை எதிர்க்க ஆள் இல்லாமல் இருபது வருடங்களுக்கும் மேலாக அதிபர், பிரதமர் என்று பல்வேறு பதிவுகளை ரஷ்யாவில் வகித்து வருகிறார். புடினை எதிர்க்கும் எல்லோரும் ஒன்று நாடு கடத்தப்படுகிறார்கள், இல்லை கைது செய்யப்படுகிறார்கள், அதுவும் இல்லை எனில் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதிலும் பல முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் உடலில் விஷம் கலக்கப்பட்டு மரணம் அடைந்து உள்ளனர். ஆனால் இதில் எதிலும் புடின் இதுவரை நேரடியாக குற்றஞ்சாட்டப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பாவெல் ஆண்டோ பலியாகி உள்ளார். சர்வதேச அளவில் இந்த மரணம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியா இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

    English summary
    Pressure mounting on India after the mysterious death of a Russian MP and his friend in Odisha .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X