பசுவதை தடைச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மோடிக்கு பாபா ராம்தேவ் வலியுறுத்தல்
ஜெய்பூர்: பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க உத்தர பிரதேசத்தில் உள்ளது போல நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகா குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, " உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முஸ்லீம் நபர் ஒருவர் அந்த கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன். பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் பசுக்கள் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. மொகலாய மன்னர் அவுரங்கசிப் ஆட்சிக்காலத்திலும் பசுக்கள் கொல்லப்படுவதற்கு அவர் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், பசுக்கள் கொல்லப்படுவதை முற்றிலுமாக தடைசெய்து, முன்னோடி மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்கி வருகின்றது. உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவால் மாநிலத்தில் பசுவதை தடைச்சட்டத்தை கொண்டுவர முடியும் என்றால் நாடு முழுவதும் இதனை பிரதமர் மோடியால் நடைமுறைப் படுத்த முடியும். பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் மோடி நாடு முழுவதும் அறிவிக்க வேண்டும்.
நாடு முழுவதிலும் பசுக்களை கொல்ல தடைவிதிக்கப்பட்டால், மத ரீதியிலான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்" என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications