குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்! நாளை பட்ஜெட் தாக்கல்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகியது. பொது பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட், நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு இன்று முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு மார்ச் மாதம் 9ம் தேதி 2வது அமர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 12ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.

நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரை இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்தது. சுமார் ஒன்றேகால் மணி நேரம் ஜனாதிபதி உரையாற்றினார். தீவிரவாதத்திற்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததோடு, பண மதிப்பிழப்பு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற பல திட்டங்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக அவர் நாடாளுமன்றத்திற்கு, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துவரப்பட்டார்.
கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருந்த ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை நடப்பு ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொது பட்ஜெட்டுடன் சேர்ந்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது நாளான நாளை, ஒருங்கிணைந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவிருக்கிறார்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் நேற்று 2 அனைத்து கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications