நாங்க ஐயனின் சகோதரிகள்.. 50 வயது வரை உயிருடன் இருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.. பெண்கள் கேள்வி
Recommended Video

சபரிமலை: 50 வயது வரை நாங்கள் உயிருடன் இருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம் என சபரிமலைக்கு வந்த பெண்கள் கேள்வி எழுப்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாதவிடாய் வயதில் இருக்கும் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பாஜக, இந்து அமைப்பினர், காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு பெண்கள் பிரிவினர் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐப்பசி மாத பூஜைக்காக பெண்கள் திரளுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு பெண்கள் கூடினர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணும் சபரிமலையை நெருங்காத வகையில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பக்தர்கள் கூட்டம்
சபரிமலை கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி அங்கு பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு சில நாட்களே உள்ளதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சபரிமலைக்கு புறப்பாடு
இதனிடையே இங்கு 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பினர் 11 பேர் சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த 11 பேரும் கம்பமேடு, முண்டகயம் வழியாக பம்பைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்றடைந்தனர்.

சகோதரிகள்
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பெருவழிப்பாதையில் 5 கி.மீ.தூரம் வரை சென்றனர். அதற்கு மேல் அவர்கள் முன்னேறி செல்ல விடாமல் ஐயப்பன் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது பெண்கள் கூறுகையில் ஐயப்பனின் சகோதரிகள் நாங்கள்.

விரதம்
சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பெண்களுக்கும் சம உரிமை உள்ளது.நம்பூதிரி ஒருவர் எங்களது இருமுடிப் பையை கொடுக்க மறுத்தார். ஆண்கள் சிலர் எங்களது இருமுடி பைகளை பறித்தனர். நாங்கள் முறைப்படி விரதம் இருந்துதான் வந்தோம்.

கியாரண்டி
போலீஸாரும் எங்களை சுவாமி தரிசனம் செய்ய அழைத்து செல்வதாக உறுதியளித்தனர். 50 வயதுக்கு பிறகுதான் பெண்கள் சபரிமலைக்கு வர வேண்டும் என்றால் அதுவரை நாங்கள் உயிருடன் இருப்போம் என்பதற்கு என்ன கியாரண்டி என்று பெண்கள் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications