போபால் - டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்
போபால்: நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை மத்திய பிரதேசத்தின் போபாலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்த ரயில் டெல்லி வரை இயக்கப்படுகிறது.
சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரயில் சேவை உருவாக்கப்பட்ட பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கப்பட்டது. அப்படி வந்ததுதான் சதாப்தி. சதாப்தி ரயில்கள் நாட்டின் அதிவேகமான ரயில்களில் ஒன்றாகும். இது அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. இருப்பினும் சராசரியாக 85-93 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் போபாலிருந்து இயக்கப்படும் சதாப்தி வண்டியானது மணிக்கு 160 கி.மீ வேகம் வரை செல்லும். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலுக்கு மாற்றாக 'வந்தே பாரத்' ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் முக்கிய நகரங்களை இணைப்பதாகும். சதாப்தி வண்டி 140 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டால், வந்தே பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். அந்த வகையில் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019ம் ஆண்டு இயக்கப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு இருந்த நிலையில் அடுத்தடுத்த ரயில்கள் களத்தில் இறக்கப்பட்டன. இந்த ரயிலில் மொத்தமாக இதில் சுமார் 887 பேர் பணிக்கலாம்.
இந்நிலையில் தற்போது போபால் டூ டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் இன்று முதல் தனது சேவையை தொடங்க இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே மொத்தம் 706 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த தொலைவை வந்தே பாரத் ரயில் 7.50 மணி நேரத்தில் கடந்து விடும். இந்த புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இது நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலாகும். என்னதான் சதாப்தி ரயில் வேகமான ரயிலாக இருந்தாலும், போபாலிலிருந்து டெல்லி வந்து சேர 8 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். தற்போது மும்பையிலிருந்து டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மட்டுமே 7.55 மணி நேரத்தில் போபாலிலிருந்து டெல்லி வந்து சேர்கிறது.
எனவே இதுபோன்று விரைவு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையின் அடிப்படையில்தான் தற்போது வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போபாலின் ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஆக்ரா கான்ட் நிலையம், வீராங்கனை லக்ஷ்மிபாய் ஜான்சி மற்றும் குவாலியர் ரயில் நிலையம் வழியாக டெல்லி வந்து சேரும். ஆனால் டெல்லி ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு பதிலாக ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இந்த வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்படும். அதாவது போபாலிலிருந்து விடியற்காலை 5.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 11.40 மணியளவில் ஆக்ரா வந்து சேரும். பின்னர் ஆக்ரா கான்ட் ஸ்டேஷனில் 5 நிமிடம் நின்றுவிட்டு பின்னர் கிளம்பி சரியாக மதியம் 1:45 மணிக்கு டெல்லிக்கு வந்து சேரும். அதேபோல ரிட்டன் ரயில் மதியம் 2:45 மணிக்கு புது டெல்லியிலிருந்து வந்தே பாரத் ரயில் புறப்படும். இது மாலை 4.45 மணிக்கு ஆக்ராவை வந்தடையும் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணியளவில் போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications