அசுர பலத்தில் அகிலேஷ்..கோட்டையில் கால் வைக்கும் பிரதமர்! அயோத்தி ராமர் கோவிலில் மோடி தரிசனம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கோட்டையான எட்டாவாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றும் நிலையில், மாலை அயோத்தியில் பால ராமரை தரிசனம் செய்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு கட்ட வாக்குப்பதிவும் நிறைவு பெற்றிருக்கிறது. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜக காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி: செல்லும் இடங்களில் எல்லாம் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல், குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 26 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதே போல் கோவாவின் வடக்கு கோவா, தெற்கு கோவா ஆகிய இரு தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
சமாஜ்வாடி கட்சி: தற்போது தேர்தல் நடைபெறவுள்ள உத்தரபிரதேசத்தில், பாஜக - சமாஜ்வாடி இடையே கடும் போட்டி நடக்கிறது. பாஜகவின் பிரச்சாரம் பிரதான கட்சியான சமாஜ்வாடியில் கோட்டைகளை குறிவைத்தே இருக்கிறது. குறிப்பாக சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் அங்கு பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.
பாஜக விமர்சனம்: பாஜக ஒருபோதும் வெற்றி பெறாத சமாஜ்வடி கட்சியின் கோட்டையான மெயின்புரியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோ நடத்தினார். இந்நிலையில் அந்த தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்களது அனைத்து பேரணிகளிலும், முலாயம் சிங் யாதவின் குடும்ப அரசியலை விமர்சித்து வருகிறார்.

அயோத்தியில் தரிசனம்: இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கோட்டையான எட்டாவாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அதன்பிறகு பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பால ராமரை தரிசனம் செய்தார். பிரமதர் மோடி கடந்த ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றார். அவர் தான் கோவில் கருவறையில் பாலராமருக்கு சிறப்பு பூஜை செய்தார். அதன்பிறகு இன்று 2வது முறையாக அவர் அயோத்தி ராமர் கோவிலில் பாலராமரை தரிசித்தார். ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
அதன்பிறகு அங்குநடைபெறவுள்ள சாலை பேரணியில் பங்கேற்கிறார். எட்டாவாவுக்குப் பிறகு, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சீதாபூரில் நடைபெறும் பேரணியிலும் உரையாற்றுகிறார். அதன்பின், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, ரோட்ஷோ நடத்துவார். கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் கோவிலில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications