குட்டி இளவரசர் ஜார்ஜூக்காக கேரளாவில் ரயில், கார் வாங்கிய தாத்தா சார்லஸ்
திருவனந்தபுரம்: ஒன்பது நாள் பயணமாக இந்தியா வந்திருந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், தனது பேரன் ஜியார்ஜூக்காக விளையாட்டு கார், ரயில் போன்ற பொம்மைகளை வாங்கிச் சென்றுள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமீலாவுடன் 9 நாள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார். வடமாநிலங்களைச் சுற்றிப் பார்த்த சார்லஸ்-கமீலா தம்பதியினர் சில தினங்களுக்கு முன்னர் கேரளா சென்றனர்.
நேற்று கேரளாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கு கொள்வதற்காக புறப்பட்டார் சார்லஸ். புறப்படுவதற்கு முன் தனது பேரன் ஜியார்ஜூக்காக அழகிய பொம்மைகள் சிலவற்றை வாங்கினார்.

கேரளா....
நேற்று தனது 65வது பிறந்தநாளைக் கேரளாவில் கொண்டாடினார் இளாவரசர் சார்லஸ். அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

கலைப் பொருட்கள்....
இந்தியச் சுற்றுப்பயணத்தில் ஏராளமான கலைப் பொருட்கள் வாங்கியுள்ளார் சார்லஸ்-கமீலா தம்பதியினர். நேற்று கேரளாவிலும் சில கலை நயம் மிக்கப் பொருட்களை அவர்கள் வாங்கினார்கள்.

பொம்மைகள்....
குறிப்பாக தனது குட்டிப்பேரனும், இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் மகனுமாகிய ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிசுக்கான பொம்மைகள் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

இயற்கைச் சாயம்...
இயற்கையான தாவரச் சாயம் பூசப்பட்ட கார், ரயில் போன்ற பொம்மைகள் உட்பட சிலவற்றை அவர்கள் தங்களது பேரனான ஜார்ஜூக்காக வாங்கினார்கள்.

வெள்ளைத் தேயிலை....
மேலும், வெள்ளை தேயிலை, கைச்செயின், சால்வைகள் மற்றும் சில கலைப் பொருட்களைக் கமீலா வாங்கினார்.

ஐ லைக் கேரளா...
கேரளப் பயணம் குறித்தான தனது அனுபவத்தை இளவரசர் இவ்வாறு விவரிக்கிறார், ‘கேரள மக்கள் பெருந்தன்மையுடன் வரவேற்றனர். அவர்களை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது' என்றார்.

ஓவர் வெயில்....
ஆனால், இந்திய வெயில் தான் தங்களை மிகவும் வாட்டி எடுத்து விட்டதாக கூறினார் இளவ்ரசர் சார்லஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications