துப்பட்டாவில் தேசியக் கொடி... பிரியங்கா சோப்ராவுக்கு குவியும் கண்டனங்கள்
சுதந்திர தினவிழா அன்று தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்தது பெரும் கண்டனத்துக்குள்ளாகியது.
மும்பை: தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் அதன் நிறத்திலாலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சுதந்திர தினவிழாவின் போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் அணிந்திருந்தார். அவரது கழுத்தில் தேசியக் கொடியின் மூன்று நிறங்களாலான துப்பட்டாவை அணிந்திருந்தார். இதை தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுத்தும் அவர் வெளியிட்டுள்ளார்.

அசோக சக்கரம் இல்லை
மேலும் சுதந்திர தின வாழ்த்துகள், எனது இதயம் இந்தியாவுக்கு சொந்தம், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளை அவர் பயன்படுத்தியதால் அவரது வீடியோ வைரலாக பரவியது. அவர் அணிந்திருந்த தேசியக் கொடியிலான ஆடையில் அசோக சக்கரம் இல்லை.

ஆத்திரம்
தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததால் ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ராவுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதில் நாட்டின் கொடிக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள், இதுபோல் சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக பிரியங்கா மன்னிப்பு கோர வேண்டும்.
|
சுயவிளம்பரத்துக்காக...
தனது சுய விளம்பரத்துக்காக இந்தியாவை அவமதிக்கும் செயலை அவர் செய்கிறார். அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தங்கள் எதிர்ப்புகளை பதிவுகளாக வெளியிட்டனர்.

சேலை அல்லது சல்வார் கமீஸ்
சுதந்திர தினத்தன்று பிரியங்கா சோப்ரா மேற்கத்திய ஆடைகள் அணிந்திருந்ததற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நன்னாளில் சேலையையோ, சல்வார் கமிஸையோ அவர் அணிந்திருக்கலாம் என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications