Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை.. பிரியங்கா காந்தி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைப்பான தேர்தல் ஆணையம் பலவீனமடைந்துள்ளது என்றும், மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு சலசலப்புகள எழுந்திருக்கின்றன. இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரியங்கா காந்தி மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

Priyanka Gandhi criticized that people have lost faith in electronic voting machines

அவர் பேசியதாவது, "இன்று நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. இதனை போக்க மோடி அரசு என்ன செய்தது? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறிய பாஜக, இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் சாக்கு சொல்லி வருகிறது. அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் அவர்கள் இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள். மறுபுறம் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆனால் இதையெல்லாம் மோடி கண்டுக்கொள்ளவில்லை. இன்று நம்முடைய ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. காரணம், ஜனநாயகத்தை பலப்படுத்த உருவாக்கப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையம் பலவீனமடைந்துள்ளது. மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது நம்பிக்கை இல்லை" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் விவிபி ஒப்புகை சீட்டு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பிரியங்கா காந்தி பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

வழக்கு விவரம்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது என்றும், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும், வாக்களிக்கும் வாக்காளர்களின் ஒப்புகைச் சீட்டினை சரிபார்த்து, தனியே ஒரு பெட்டியில் போட வேண்டும். அதன்பின், இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கை, ஒப்புகைச் சீட்டுகள் எண்ணிக்கையை ஒப்பிட்டு தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ண வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தாக்கல் செய்திருந்த மனு கடந்த 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், "விவிபேட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 5-6 மணி நேரத்தில் பணியை முடித்துவிடலாம். 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களை வாங்க அரசு ரூ.5000 கோடியை செலவழித்துள்ளது. ஆனால் தற்போது வரையில் வெறும் 20,000 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையல் 5 சதவிகிதம்தான்" என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், நேஹா ரதி ஆகியோர் கூறியிருந்தனர்.

மனுதாரரின் இந்த கோரிக்கை மீது பதிலளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்படி இருக்கையில்தான் பிரியங்காக காந்தியும் இது குறித்து பேசியியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+