Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூருக்கு போகாத பிரதமர்.. கிரிக்கெட் மேட்சுக்கு மட்டும் போவாராம்.. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துகொண்டிருக்கையில் அங்கு செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது கிடையாது என்பது வரலாறு.

Priyanka Gandhi criticized that the PM, who could not go to Manipur, only went to watch the World Cup cricket match

எனவே காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. காங்கிரஸை பொறுத்த அளவில் முதல்வர் அசோக் கெலாட், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலாட் என இருவருக்கும் இடையே உள்ள சலசலப்புகள் கட்சிக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தீவிரமான பிரசாரத்தின் மூலமாக இதை சரிசெய்து, நிலைமையை மாற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற கட்சி திட்டமிட்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஷாபுராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரியங்கா காந்தி, மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துக்கொண்டிருக்கையில் அங்கு செல்லாத பிரதமர் மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார் என விமர்சித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "தன்னை ஒரு துறவி என்று அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடி, அவரது ஆட்சிக்காலத்தில் மட்டும் பாஜகவின் சொத்து மதிப்பு சரமாரியாக உயர்ந்தது எப்படி? என்பதை கூற முயுமா? மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக இயல்பு நிலை திரும்பவில்லை. இப்போதும் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. இப்படி இருக்கும்போது அங்கு போகாமல், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க அகமதாபாத்துக்கு சென்றிருக்கிறார்.

Priyanka Gandhi criticized that the PM, who could not go to Manipur, only went to watch the World Cup cricket match

அதுவும் இந்திய அணி வெற்றி பெற்றால் அதில் தனக்கு கொஞ்சம் கிரெடிட் கிடைக்கும் என்கிற எண்ணத்தில்தான் சென்றிருக்கிறார். இப்படியாக எங்கெல்லாம் தனக்கு பெருமையும், மரியாதையும் கிடைக்குமோ அந்த இடங்களுக்கு மட்டுமே அவர் செல்கிறார். நெருக்கடி கொடுக்கும் இடத்திற்கு அவர் செல்வது கிடையாது. இது ஒருபுறம் எனில், மறுபுறம் பெரும் தொழிலதிபர்களின் கடன்களை அவர் தலைமையிலான அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதிமாக இந்திய அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+