எங்க அண்ணனை விட்டுட்டு போறேன்.. பத்திரமா பாத்துக்கங்க.. பாசமலர் பிரியங்கா!
ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தி ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video

கல்பெட்டா,வயநாடு: கேரளாவில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்தி மீது பாசத்தைப் பொழிந்தெடுத்து ஒரு டிவீட் போட்டுள்ளார் தங்கை பிரியங்கா காந்தி வத்ரா.
இந்த தேர்தல்தலில்தான் எத்தனை எத்தனை உறவுகள். அவர்கள் மீதுதான் எத்தனை எத்தனை பாசங்கள். அக்கா என்று அவரவர் சார்ந்த கட்சியினரால் அக்கா என்று பாசமாக அழைக்கப்படும் கனிமொழியும், தமிழிசையும் தூத்துக்குடியில் மோதுகின்றனர்.
அதேபோல அக்கா என்று பலராலும் பாசமாக அழைக்கப்படும் ஜோதிமணி கரூரில் களம் கண்டுள்ளார். இந்த வரிசையில் இன்னொரு பாசக்கார தங்கையும் தேர்தல் களத்தில் இணைகிறார். அவர்தான் பிரியங்கா காந்தி. ஆனால் இவர் போட்டியில் இல்லை.

தீவிர பிரச்சாரம்
பிரியங்கா காந்தி சமீபத்தில்தான் முழு நேர அரசியலில் இறங்கினார். உ.பி. மாநில பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் போட்டியிடவில்லை. மாறாக பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

வேட்பு மனு
இந்த நிலையில் பிரியங்காவின் அண்ணன் ராகுல் காந்தி தற்போது இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அமேதி ஒரு தொகுதி. இன்னொரு தொகுதியாக கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி. இங்கு இன்றுதான் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அண்ணனுடன் கூடவே வந்திருந்து வேட்பு மனுத்தாக்கலின்போது உடன் இருந்தார் தங்கை பிரியங்கா.
|
ட்வீட் போட்டார்
தங்கையின் பாசம் அத்தோடு நின்று விடவில்லை. எடுத்தார் டிவீட்டை, போட்டார் ஒரு டிவீட்டை. அதுதான் இந்த செய்தியே. அந்த டிவீட்டில், "என் அண்ணன், என்னுடைய நம்பிக்கைக்குரிய தோழன், எல்லாவற்றையும் விட மிகுந்த தீரமானவன். வயநாடு அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளட்டும். அவர் உங்களை எப்போதும் கைவிட மாட்டார்" என்று கூறியுள்ளார் பிரியங்கா.

வைரல் ட்வீட்
அண்ணனை தனியாக வயநாட்டில் விட்டு விட்டுப் போகாமல், அந்த மக்களிடமும் ஒப்படைத்துள்ள இந்த பாசக்கார தங்கையின் பாங்கு வைரலாகியுள்ளது. பலரும் அந்த டிவீட்டுக்குப் போய் "கவலைப்படாதீங்க. நாங்க பாத்துத்துக்கிறோம்" என்று கருத்திட்டு வருகின்றனர்.

அன்பான தங்கை
என்னதான் சொல்லுங்கள் அக்காக்கள், தங்கைகளுக்கு நிகர் யாருமல்ல.. இன்னொரு தாய் என்று சும்மாவா சொன்னார்கள். பிரியங்காவின் இந்த டிவீட்டும் கூட ஒரு தாயின் பரிவையும், அன்பையும்தான் வெளிப்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications