ஒருவர் கையில் எல்லா அதிகாரத்தையும் தந்து விடாதீர்கள்- மோடியை தாக்கிய பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அதிகாரங்கள் அனைத்தும் ஒருவர் கையில் இருக்க கூடாது என்று நரேந்திரமோடியை தாக்கி பேசினார் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா குறுகிய காலத்தில் பல கோடிக்கு அதிபரானது குறித்து சர்ச்சை வெடித்துள்ள நிலையில் எனது குடும்பத்தாரை அவமரியாதை செய்யும் விதமாக தனிமனித தாக்குதல்கள் நடத்தப்படுவதாக நேற்று பிரியங்கா காந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

Priyanka hits out at Modi; Warns againist concentration of power

காங்கிரசின் ஸ்டார் பேச்சாளராக மாறியுள்ள பிரியங்கா இன்று தனது தாய் சோனியாகாந்தி போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள ரேபரேலி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் ஒரே மனிதர் (மோடி) எடுத்துக்கொள்வது நல்லதா? அல்லது அதிகாரங்கள் மக்கள் கைகளில் இருப்பது நல்லதா?

தனிமனித தாக்குதல்களாக விவாதங்கள் இருக்க்ககூடாது. இதுபோன்ற விஷயங்கள்தான் விவாதிக்கப்பட வேண்டும். பாஜவை பொறுத்தளவில் மக்களிடம் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசிவருகிறது. ஆனால் காங்கிரசோ வளர்ச்சி குறித்து மட்டுமே பேசிவருகிறது. நீங்கள் வாக்களிக்கபோகும் முன்பாக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையுடைய ஆட்சி வேண்டுமா அல்லது அனைவரையும் அரவணைக்கும் ஆட்சி வேண்டுமா என்பதை மட்டும் சிந்தித்து பார்த்து வாக்களியுங்கள்.

இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+