தேர்தல் விதிமுறை மீறல்- பிரியங்காவின் உதவியாளர் அமேதியை விட்டு வெளியேற உத்தரவு!
அமேதி: தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் இருந்து பிரியங்காவின் உதவியாளர் பிரீத்தி ஷகாய் வெளியேற தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இன்றைய வாக்குப் பதிவின் போது வாக்குச் சாவடி ஒன்றுக்குள் உரிய அனுமதி கடிதம் இன்றி பிரியங்காவின் உதவியாளர் பிரீத்தி ஷகாய் உள்ளே நுழைந்தார்.

இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பிரியங்காவின் உதவியாளரை அமேதி தொகுதியை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
<center><iframe width="100%" height="417" src="//www.youtube.com/embed/xniTVV0iRtY?autoplay=1&logo=1&hideInfos=0&start=0&syndication=127059&foreground=&highlight=&background="></iframe></center>












Click it and Unblock the Notifications