கர்நாடகாவில் சன்னி லியோன் கால் வைத்தால் கூண்டோடு தற்கொலை.. மிரட்டும் கன்னட அமைப்புகள்!
சன்னி லியோன் கர்நாடகாவிற்குள் வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கன்னட குழுவின் தலைவர் மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
பெங்களூர்: பெங்களூரில் நடக்கும் புதுவருட கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சன்னி லியோன் கர்நாடகா வர இருந்தார். இந்த கொண்டாட்டங்களில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்று கன்னட அமைப்புகள் இரண்டு நாட்களாக போராடி வந்தனர்.
தற்போது கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை அமைப்பின் தலைவரான ஹரிஷ் இதற்கு எதிராக தற்கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார். சன்னி லியோன் ஊருக்குள் கால் வைத்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய தொண்டர்கள் சிலரும் என்னுடன் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற கூறியுள்ளார். இதனால் தற்போது கர்நாடகாவில் பதற்றம் நிலவி இருக்கிறது.

பெங்களூரில் சன்னி லியோன்
கர்நாடகாவில் இந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரில் நடக்க இருக்கும் 'சன்னி நைட்ஸ்' புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சன்னி லியோன் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த கொண்டாட்டத்தில் அதிக இளைஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் நிறைய வித்தியாசமான விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தது.

பிரச்சனை உருவானது
இந்த விளம்பரங்கள் பெங்களூர் முழுக்க முழுக்க அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டது. இதன் காரணமாக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற அமைப்பு சன்னி லியோனுக்கு எதிராக குரல் கொடுத்தது. சன்னி லியோன் பெங்களூருக்கு வர கூடாது என போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் பெரிய அளவில் கர்நாடகாவின் பல பகுதிகளில் நடந்தது. மேலும் இதனால் பெங்களூர் மக்களின் கலாச்சாரம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

தடை
இந்த பிரச்சனை இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே இந்த பிரச்சனையின் தன்மையை உணர்ந்த கர்நாடக அரசு சன்னி லியோன் பெங்களூர் வருவதற்கு தடை விதித்தது. மேலும் அந்த நிகழ்வுக்கும் கர்நாடக அரசு தடை விதித்தது. இதனால் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தற்கொலை செய்து கொள்வேன்
பெங்களூருக்கு ஏற்கனவே சில முறை சன்னி லியோன் வந்து இருக்கிறார். ஆனால் இன்னொரு முறை சன்னி லியோன் பெங்களூருக்கு வரக்கூடாது. முக்கியமாக இந்த ஜனவரி 1 அவர் பெங்களூர் வந்தால் டிசம்பர் 31ம் தேதி தற்கொலை செய்து கொள்வேன் என கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை அமைப்பின் தலைவரான ஹரிஷ் கூறியுள்ளார். சன்னி லியோனுக்கு சரியான பின்புலம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications