மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தைக் கண்டித்து 18-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு
பெங்களூர்: காவிரி ஆற்றில் அணைகட்டு வதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் வரும் 18-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார் பற்ற ஜனதா தளம் கட்சி உட்பட பல்வேறு கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிதாக அணைகள் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, சிக்கபள்ளாபூர், கோலார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கன்னட மக்களின் குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதை ஏற்க முடியாது. தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள் அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து கன்னட கூட்டமைப்பின் சார்பாக கர்நாடகத்தில் வருகிற 18-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்பு நாளன்று பெங்களூரு டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை மாபெரும் கண்டன பேரணி நடத்தப்படும்'.
இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications