செல்போன் திருடியதாக பழி.. மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை!
திருவனந்தபுரம்: செல்போனை திருடியதாக பழி சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவன், மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடு ஊரோணி கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சைனுலுதீன். இவரது மனைவி ஷகீரா. மகன் பைசல். 10ம் வகுப்பு படித்து வந்தார். இதில், சைனுலுதீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று, தனது வீட்டு அருகே உள்ள மருந்து கடைக்கு பைசல் சென்று மருந்து மாத்திரை வாங்கியுள்ளார். சிறுவன் சென்ற நிலையில், அந்த மருந்து கடையின் உரிமையாளரின் செல்போன் மாயமாகி உள்ளது.
அந்த செல்போனை பைசல்தான் திருடி இருக்க வேண்டுமென்று சந்தேகப்பட்டு கடைக்காரர் பைசல் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்களை மிரட்டி உள்ளார். இதுபற்றி பாலோடு போலீசில் மருந்துக்கடைக்காரர் தபுகார் செய்ததையடுத்து, போலீசார் பைசல் மற்றும் அவரது தாயாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி விட்டு அனுப்பி விட்டனர்.
வீடு திரும்பிய பைசல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவமானம் காரணமாக, மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாலோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் பைசலின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் அந்த ஆஸ்பத்திரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பைசல் மீது செல்போன் திருடியதாக பொய் புகார் கொடுத்த மருந்து கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் தர்ணா செய்தனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியபிறகு, அவர்கள் கலைந்தனர்.












Click it and Unblock the Notifications