சிஏஏ வேண்டவே.. வேண்டாம்! கறாராக மறுக்கும் அசாம் மாநிலம்.. தீ பந்தங்களை கையில் ஏந்தி மாணவர்கள் போராட்டம்
திஸ்பூர்: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் மாணவர் சங்கத்தினர் சார்பில் கையில் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
நேற்று கவுஹாத்தியில் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து பேசிய மாணவர் சங்கத்தின் மூத்த நிர்வாகி சமுஜ்ஜல் பட்டாச்சார்யா, "அரசியலமைப்புக்கும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிஏஏ எதிரானது. இது 1985ம் ஆண்டு காங்கிரஸின் ராஜீவ் காந்தி அரசாங்கத்தின் போது போடப்பட்ட அசாம் ஒப்பந்தத்திற்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.

அதாவது, வங்கதேசத்திலிருந்து கணிசமான மக்கள் அசாம் மாநிலத்தில் குடியேறினர். இதனால், அசாம் மக்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்டவை பறிபோயின. இதற்கு எதிராக அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் 1979ம் ஆண்டு முதல் அசாம் முழுவதும் கடுமையாக போராட்டங்கள் நடத்தியது. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, வங்க தேச மக்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று 1985ம் இந்திய அரசு, மாணவர் சங்கத்துடன் ஒப்பந்தம் போட்டது.
ஆனால், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ, வங்க மக்களுக்கு குடியுரிமையை வழங்க வழி வகுக்கிறது. எனவேதான் அசாமில் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும், வங்க மக்களின் குடியேற்றத்தை அங்கீகரிக்கக்கூடாது என்றே கோருகின்றனர்.

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் உத்பால் சர்மா கூறுகையில், "நாங்கள் எப்போதும் சிஏஏ-வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தையும் நாடியிருக்கிறோம். அசாம் மாநிலம், சட்டவிரோதமாக குடியேறியவர்களின் சுமையை சுமந்துக்கொண்டிருக்கிறது. இந்த சுமையை இனிமேலும் தாங்க முடியாது. சட்டத்தை முழுமையாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும்" என்றும் கூறியுள்ளார்.
சிஏஏ என்ன சொல்கிறது?: கடந்த 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications