பாக். படகு விவகாரத்தில் சந்தேகம் எழுப்புவதா?.. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு எதிராக போராட்டம்!
டெல்லி: குஜராத் கடற்பரப்பில் பாகிஸ்தான் படகு வெடிவைத்து தகர்க்கப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்தை எழுப்பி செய்தி வெளியிட்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டுக்கு எதிராக டெல்லியில் இந்துத்துவா அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து மீன்பிடிப் படகு ஒன்றில் மர்ம நபர்கள் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்தனர். அந்த மீன்பிடிப் படகை கடலோர காவல்படை நெருங்கிய போது அதில் இருந்த 4 பேரும் படகுக்கு தீ வைத்து தகர்த்து தற்கொலை செய்து கொண்டனர்.

இது தொடர்பாக ஜனவரி 3-ந் தேதியன்று செய்தி வெளியிட்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு, படகில் இருந்த 4 பேரும் சாதாரண கடத்தல்காரர்களாக இருக்கலாம்.. அவர்கள் தீவிரவாதிகள் என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவு என்று எழுதியிருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து சேனா என்ற அமைப்பினர் டெல்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்கு எதிரே இன்று போராட்டம் நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் குரலாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுகிறது என்று குற்றம்சாட்டி அவர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன் அந்த நாளேட்டையும் தீ வைத்து எரித்து போராட்டம் நடத்தினர்.
High time , seriously Indian Express should be renamed Pakistan Express
— Vipul Bhatotia (@Vipul_Madridsta) January 5, 2015 இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்து சேனாவின் தலைவர் விபு படோடியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமது நாளேட்டின் பெயரை பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று விமர்சித்திருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications